மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேப்டன் விஜயகாந்தின் மகனா இது.? ஆளை அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவரை ரசிகர்கள் புரட்சி கலைஞர் என்றும், கேப்டன் என்றும் அன்போடு அழைத்து வந்தனர். தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
ஆரம்ப காலகட்டத்தில் சினிமா வாய்ப்பை தேடி மிகவும் கஷ்டப்பட்டு, முன்னேறி தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் பிடித்தவர். இவர் நடித்த படங்களில் புலவர் மகன், புலன் விசாரணை, செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன் போன்ற பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன.
இதன் பிறகு அரசியலில் காலடி எடுத்து வைத்த விஜயகாந்த், சில நாட்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். இவரது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாக ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதனையடுத்து விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டி என்பவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க கமிட்டாக இருக்கிறாராம். அதற்காக தனது தோற்றத்தையே மாற்றி கெத்தான லுக்கில் ஸ்டைலாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி விஜயகாந்தின் மகனா இவர் என்று அதிர்ச்சியில் ரசிகர்கள் வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.