மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட்.!
நடிகர் தனுஷை பொருத்தவரையில், திருச்சிற்றம்பலம்,வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த சூழ்நிலையில் தான் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம், எதிர்வரும் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பின் இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் தான் வெகு நாட்களுக்கு பின்னர் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்துள்ள உன் ஒளியில் என்ற காதல் பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.