மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தப் பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொள்ளுங்கள்.! முதல்வருக்கு வேண்டுகோள் வைத்த மாரி செல்வராஜ்.!
திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் போட் மூலமாக மீட்கப்பட்டு வருவதுடன் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னில்தான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலி மக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்" வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை .
வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன். என முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருக்கிறார் அவருடைய இந்த வலைதள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.