#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இராவணன் குறித்த சர்ச்சை கருத்து! ஆதிபுருஷ் பட நடிகருக்கு எதிராக அதிரடி வழக்கு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகுவதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். மேலும் அவரை எதிர்க்கும் ராவணனாக பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நடிக்கிறார். மேலும் சீதாவாக நடிகை கீர்த்தி சனன் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சைஃப் அலிகான், ஆதிபுருஷ் திரைப்படம் ராவணனின் நல்ல பக்கத்தை காட்டும் என்று கூறியிருந்தார். அது சர்ச்சையாகி சைஃப் அலிகானுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனை தொடர்ந்து சைஃப் அலிகான் தனது கருத்தை திரும்பப்பெறுவதாக கூறி மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் ஜான்பூர் நீதிமன்றத்தில் ஹிமன்சு ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் சைஃப் அலி கான் கூறிய கருத்து இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்குபதிவு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற 23-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.