மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஷால் மீது நீதிமன்றத்தில் அதிரடி வழக்குப்பதிவு.! வெளியான அதிர்ச்சி பின்னணி!!
தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி ஏராளமான பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்
அதுமட்டுமின்றி நடிகர் விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட பணத்துக்கு நிறுவனம் சார்பில் வரிபிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பிடித்தம் செய்த தொகையை விஷால் வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஷால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.