மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட கொடுமையே.! பூனைக்கும் சாதியா? வைரலாகும் புகைப்படத்தால் நொந்துபோன நெட்டிசன்கள்!!
அன்று முதல் இன்று வரை ஜாதி என்பது மனிதர்களின் இரத்தங்களில் ஊறி ஒரு மாபெரும் அவலமாக உள்ளது. மேலும் பள்ளிகள் தொடங்கி வேலைகள், காதல், திருமணம் என அனைத்திலும் ஜாதியே பெரும் பிரச்சினையாக,சாபக்கேடாக தலைதூக்கி நிற்கிறது.மேலும் அறிவியலும் விஞ்ஞானமும், எவ்வளவு வளர்ந்தாலும் மக்கள் மனதிலிருந்து அந்த சாதி என்ற உணர்வை மற்றும் மாற்ற முடியவில்லை.
இந்நிலையில் கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றை ஜாதி பெயரை குறிப்பிட்டு முகம் சுழிக்க வைத்த செய்தி வைரலாகி வருகிறது. கேரளாவில் ஒரு பாசமிகு குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் வளர்த்த பூனை ஒன்று இறந்த நிலையில் அதற்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக செய்தித்தாளில் நினைவு அஞ்சலி விளம்பரம் கொடுத்துள்ளனர்.
அது பூனை இறந்துவிட்டதை குறித்து வருத்தம் தெரிவித்து தங்களது உறவுகளை குறிப்பிட்டிருந்த அவர்கள் பூனையின் பெயரான சுஞ்சு என்ற பெயருக்குப் பின்னால் தங்கள் ஜாதி பெயரை குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளனர். இதனை கண்டு விலங்குக்கும் ஜாதியை பரப்பும் இந்த சம்பவத்தால் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விளாசி வருகின்றனர்.