மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சந்திரமுகி பட குட்டி பாப்பாவா இது.! 18 வருஷங்களுக்கு பின் பிரபல விஜய் டிவி சீரியலில் என்ட்ரி.!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற சூப்பர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெகு நாட்கள் ஓடி வசூல் சாதனையும் படைத்தது. பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, மாளவிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரகர்ஷிதா. பிரகர்ஷிதாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ளனர். இந்நிலையில் அவர் தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர் கிழக்குவாசல். இத்தொடரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் பிரகர்ஷிதாவும் நடிக்க உள்ளாராம். தொடரில் மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இனி தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.