மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளையராஜாவை, பங்கமாக கலாய்த்த இயக்குனர் சீனு ராமசாமி.! X-தள பதிவு வைரல்.!
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, 'படிக்காத பக்கங்கள்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "சமீப காலமாக பாடல் வரிகள் பெரியதா? இசை பெரியதா? சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு நல்ல பாடல் உருவாக இசையும், பாடல் வரிகளும் இணைந்து இருக்க வேண்டும். ஒரு நபரை பெயர் வைத்து தான் அழைக்க முடியும். பெயரே இல்லை என்றால் அந்த நபரை நாம் எப்படி கூப்பிட முடியும்?
வெறும் இசை மட்டும் இருந்தால் அந்தப் பாடலை நாம் அடையாளம் காண முடியுமா? காலம் கடந்தும் பாடல்கள் இசை மட்டும் தான் காரணமா? கண்ணதாசனின் வரிகளில் உருவாகிய பாடல்களை எந்த இசையும் இல்லாமல் பாட முடியாதா? பாட்டுக்கு பெயர் வைத்தது மொழிதான். அதை மெருகேற்றி அழகு செய்ததுதான் இசை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தங்கம் தங்கம் தான். வைரம் வைரம் தான். ஒரு நல்ல பொருள் எவ்வளவு வருடங்கள் கழிந்தாலும் தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வரும்.
ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் அந்த படம் நிச்சயம் வெற்றிபெரும். சில இடங்களில் மொழி பெரிதாகவும், சில இடங்களில் இசை பெரிதாகவும் திகழும் சூழ்நிலை ஏற்படும் அதை புரிந்து கொள்பவன் தான் ஞானி. புரியாதவன் அஞ்ஞானி." என்று பேசி இருந்தார். இளையராஜாவை விமர்சிப்பது போல இந்த பேச்சு இருந்ததால் இளையராஜாவின் தம்பியும், திரை பிரபலமுமான கங்கை அமரன் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இது பற்றி வைரமுத்து எந்த விமர்சனமும் வைக்கவில்லை.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டு இருக்கிறார். அதில், "உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள்." என்று தெரிவித்துள்ளார்.