மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
CWC நிகழ்ச்சியிலிருந்து விலகிய மணிமேகலை.! இதுதான் காரணமா?? உண்மையை உடைத்த செஃப் தாமு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி சமையல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே ரசிகர்களை கவரும் வகையில் காமெடியாகவும் கொண்டு செல்லும் இந்த நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கலகலப்பான, நக்கல்தனமான பேச்சாள் சேட்டையால் ரசிகர்களை கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் மணிமேகலை. அவர் திடீரென அண்மையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால்தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார் எனவும் பல தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் செஃப் தாமு இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறுகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை காமெடியை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன். அவர் என்னுடைய மகள் மாதிரி. அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது வருத்தத்தை தந்தாலும் அது அவரது தனிப்பட்ட முடிவு.
மணிமேகலை தன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதில் கவனம் செலுத்தவுள்ளார். அவரது எதிர்காலம் கருதியே இப்படியொரு முடிவை எடுத்துள்ளார் என கூறியுள்ளார். மேலும் அவர் மென்மேலும் வெற்றியடைய வேண்டும் எனவும் செஃப் தாமு வாழ்த்து கூறியுள்ளார்.