மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியான செய்தி! ஆப்பு வைத்த நீதி மன்றம்! என்னனு உடனே படிங்க!
சாலை விபத்துகளில் பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்பட்ட காரணம் சாலை விதிகளை மதிக்காமல் நடப்பதே. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதே உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட காரணம் என்கின்றது ஒரு ஆய்வு.
இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதி மன்றம். தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது போல தமிழகத்தில் ஏன் முடியவில்லை? தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
மேலும் சட்டத்தை மதிக்காமல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டுநர் உரிமத்தை ஏன் பறிக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.