மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சூர்யாவுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்..!
ஜெய் பீம்". நடிகர் சூர்யா தயாரித்து நடித்த இப்படத்தை, த. செ . ஞானவேல் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும்படி இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, குறவர் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர் முருகேசன் மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.
புகார் மீது நடக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் மனுத்தாக்கல் செய்தார்.
இதன்படி, இவ்வழக்கு நேற்று நீதிபதி ஹேமலதா முந்நிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை, இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.