மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகரின் கார் மோதி, இருசக்கர வாகனத்தில் வந்தவர் துள்ளத்துடிக்க பலி.. சென்னையில் சோகம்.!
மதுபோதையில் காரை இயக்கிய துணை நடிகரால் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணித்தார்.
சென்னையில் உள்ள ஆற்காடு சாலையில், திரைப்பட துணை நடிகரான பழனியப்பன் மதுபோதையில் தனது காரை வேகமாக இயக்கி வந்துள்ளார்.
அந்த சமயத்தில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சரண்ராஜ் என்பவர் பயணம் செய்துகொண்டு இருந்த நிலையில், அவரின் மீது துணை நடிகரின் கார் பயங்கர வேகத்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியாகினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், துணை நடிகரை கைது செய்தனர்.