சேரனின் அடுத்த அவதாரம் ஆரம்பம்! வெற்றி பெற வாழ்த்தும் ரசிகர்கள்-வைரலாகும் புகைப்படம்



Cheran next work started

பிக்பாஸ் சீசன் 3 யில் குடும்ப தலைவனாக இருந்து அனைவரையும் வழிநடத்தியவர் சேரன் அவர்கள். இவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒரு அப்பாவாக, அண்ணனாக, நண்பனாக நடந்து கொண்டார். 

அதுமட்டுமின்றி தன் விளையாட்டை விளையாட வயது ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் 70 நாட்களுக்கு மேல் இருந்து சாதனையும் படைத்துள்ளார். அதிலும் லாஸ்லியா கொண்ட அன்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. 

Cheran
பிக்பாஸ் வீட்டை வெளியேறிய சேரன் தற்போது தனது புதிய அவதாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதனை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ராஜாவுக்கு செக் என்னும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இன்று அந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகும் என கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் இந்த வெற்றி தங்களது வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.