மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் குட்டி மகனை பார்த்தீர்களா! அப்படியே அப்பாவைப் போலவே இருக்காரே!!
கன்னட சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் மருமகன் ஆவார். அவர் கடந்த ஆண்டு தனது 35 வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா. இவரும் ஒரு நடிகை ஆவார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேக்னா கணவர் சிரஞ்சீவி இறந்தபோது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்கள் சிரஞ்சீவியே மீண்டும் பிறந்திருப்பதாக பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகும் நிலையில், ஜூனியர் சிரஞ்சீவியின் புகைப்படத்தை மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் குட்டி சிரஞ்சீவி பார்ப்பதற்கு அச்சு அசல் அவரது அப்பாவைப் போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.