மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. சித்தி 2 வெண்பாவுக்கு இப்படியொரு திறமையா! வைரலாகும் வீடியோ!! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏராளமான சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது. மேலும் அன்று முதல் இன்று வரை சன் டிவி தொடர்கள் என்றாலே அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் சித்தி 2. இதில் ராதிகா நிழல்கள் ரவி என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் சீரியலை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் தற்போது முன்னணி கதாபாத்திரங்களாக அனைவரையும் கவர்ந்து வருவது கவின் வெண்பா ஜோடிதான். இதில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் துறுதுறு பெண்ணாக நடித்து ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தி வருபவர் ப்ரீத்தி ஷர்மா. சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் தற்போது வடசென்னை படத்தில் இடம்பெற்றுள்ள ஏய்.. தலைக்கேறுற என்ற பாடலை பாடி சின்ன முயற்சி என்று கூறி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் வெண்பாவுக்கு இவ்வளவு திறமையா என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.