மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேரள விமான விபத்து! இதயம் நொறுங்கி வேதனையுடன் பிரபலங்கள் வெளியிட்ட பதிவு!
நேற்று பிற்பகல் 3 மணிக்கு 191 பயணிகளுடன் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மழையின் காரணமாக வழுக்கி, ஓடு பாதையிலிருந்து
விலகியதால் ஏற்பட்ட விபத்தால் விமானம் இரண்டு துண்டுகளாக நொறுங்கியது.
இந்த விமான விபத்தில் விமானி உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Prayers for the families who have lost their loved ones ..this too shall pass ..#AirIndia
— A.R.Rahman (@arrahman) August 7, 2020
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த விபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார்.
Reports of #AirIndia crash in Kozhikode is heartbreaking. Prayers 🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 7, 2020
Praying for the safety of everyone who was on #AirIndiaExpress ! Really frightening news all around.
— dulquer salmaan (@dulQuer) August 7, 2020
மேலும் நடிகை குஷ்பு, கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான தகவல் இதயமே நொறுங்கிவிட்டது. பிரார்த்திப்போம் எனவும், துல்கர் சல்மான் "ஏர் இந்தியா விமானத்தில் இருந்த அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்திப்போம். எல்லா இடங்களிலும் பயமுறுத்தும் செய்தியாக வருகிறது" எனவும் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டும் வருகின்றனர்.