பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...
திருடா திருடி சினிமா நடிகை பிரபல சீரியலில் களமிறங்குகிறார்! எந்த சீரியலில் தெரியுமா?

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் என்றால் அது சன்டிவி தொலைக்காட்சி தான். ஆரம்பத்திலிருந்து தற்போதுவரை நம்பர் ஒன்னாக இருப்பதும் சன்டிவி தான். சன்டிவியின் இந்த வளர்ச்சிக்கும் புகழுக்கும் முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.
சன்டிவியில் முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்து வந்தனர். ஆனால், தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள், ஐடி ஊழியர்கள் என அனைவரும் தற்போது சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். இந்தநிலையில் சன் டிவியில் சமீபத்தில் துவங்கிய ரன் எனும் பிரமாண்ட சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் சினிமா காட்சிகளை போன்றே பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் வேறொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் ஹீரோயினாக நடித்த சரண்யா தான் இந்த ரன் சீரியலிலும் ஹீரோயினாக நடிக்கிறார். அதேபோல் சன்டிவியில் ஹிட்டான தெய்வமகள் சீரியலின் ஹீரோ பிரகாஷ்(கிருஷ்ணா) தான் இதிலும் ஹீரோவாக நடிக்கின்றார். மேலும், நிழல்கள் ரவி, ராஜ் கபூர் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.
பிரமாண்டமாக போய்க்கொண்டிருந்த ரன் சீரியலில் சக்தி(கிருஷ்ணா), திவ்யா(சரண்யா) இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துவந்தனர். இந்தநிலையில் கிருஷ்னாவின் மனைவி சாயாசிங் இன்று முதல் சரண்யாவுக்கு பதிலாக திவ்யாவாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் திருடாதிருடி படத்தின் கதாநாயகி சாயாசிங் தான் இனிமேல் ரன் சீரியலின் கதாநாயகி. இதற்கான ப்ரோமோவையும் ஒளிபரப்பிவருகின்றனர். இதனால் ரசிகர்கள் இந்த சீரியலை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.