இன்ஸ்ட்டா காதலால் அதிர்ச்சி.. 13 வயது சிறுமி கர்ப்பம்.. 22 வயது நபர் தலைமறைவு.!



Tiruvannamalai 13 year Old Girl pregnant 

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியை நேரில் வரவழைத்து அத்துமீறிய ஓட்டுநர்,  சிறுமி கர்ப்பமான செய்தி அறிந்து தலைமறைவான சம்பவம் நடந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுநர் சத்தியமூர்த்தி (வயது 22). இன்ஸ்டாகிராம் வாயிலாக சத்தியமூர்த்தி 13 வயதுடைய சிறுமி ஒருவரிடம் பேசி வந்துள்ளார். 

சத்தியமூர்த்தி மாணவியிடம் காதல் ஆசை காண்பித்ததாகவும் கூறப்படும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை நேரில் வரவழைத்துள்ளர். கயவனை நம்பி மாணவியும் அவர் அழைத்த இடத்திற்கு தனியே சென்றுள்ளார். 

இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. இன்ஸ்டா காதலனை நம்பிச்சென்ற பெண், சுடுகாட்டில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.!

Tiruvannamalai

சிறுமி பலாத்காரம் & கர்ப்பம்

அங்கு ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், இதனை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என சொல்லி அனுப்பி வைத்துள்ளார். பயந்துபோன சிறுமியும் இதுகுறித்து வெளியே கூறவில்லை. 

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி செய்யாறு அரசு மருத்துவமனை சென்றபோது, அங்கு மருத்துவ பரிசோதனையில் அவரின் கர்ப்பம் உறுதியானது. பெற்றோர் மாணவியிடம் இதுகுறித்து விசாரித்தபோது சத்தியமூர்த்தியின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான ஓட்டுநர் சத்தியமூர்த்திக்கு வலைவீசி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: ஆரணி: பள்ளிப்பேருந்தின் தறிகெட்ட வேகம்.. நொடியில் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!