ரூ.4000 கொடுப்பா.. லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் அதிரடி கைது.!



Krishnagiri Surveyor and Assistant Arrested by Cops 

 

பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ரூ. 4000 கொடுக்க வேண்டும் என இலஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி, புதிமுட்லு கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் தனது அத்தை கெம்பம்மாவுக்கு பாகமாக கிடைத்த 4 சென்ட் நிலத்தினை, பட்டா மாறுதல் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார். 

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; பேருந்து - வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலி.!

Krishnagiri

ரூ.4000 இலஞ்சம்

நீண்ட நாட்கள் ஆகியும் பட்டா மாறுதல் நடக்கவில்லை. பணியை முடிக்க கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் வசித்து வந்த வேப்பனஹள்ளி சர்வேயர் ஜெயகாந்த், உதவியாளர் சுரேஷிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர்கள் ரூ.4000 இலஞ்சம் கேட்டு இருக்கின்றனர். 

இதனால் சுரேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் கொடுத்த ரசாயன ரூபாய் நோட்டுகளை ஜெயகாந்த் மற்றும் சுரேஷிடம் வழங்கி இருக்கிறார். 

பணத்தை வாங்கிய இருவரும் கையும் களவுமாக இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இருவரும் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: 9 ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் தாலி; ஷாக்கான ஆசிரியர்கள்., கிருஷ்ணகிரியில் பகீர்.!