அம்மா என்ன அதிசியம் இது? வைகை ஆற்றில் உக்கிர அம்மன் சிலை.!



SIvagangai Amman Statue from River Bed 

 

சிவகங்கை; வைகை ஆற்றில், 4 அடி உயரம் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், கானூர் பகுதியில் பொதுப்பணித்துறையின் சார்பில், வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதையும் படிங்க: இவ்வுளவு வன்ம வாதிகளாடா நீங்க? சாதி வெறியில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.!

இப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், ஆற்றில் தோண்டிய பள்ளத்தில் அம்மன் கற்சிலை கிடைத்தது. பீடத்துடன் 4 அடி உயரத்தில் இருந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

sivagangai

அம்மன் சிலை

அம்மன் சிலையின் வலது கை பக்தர்களை ஆசீர்வாதம் செய்வது போலவும், இன்னொரு கையில் சங்கு ஏந்தியவாறும் இருந்தது. 

இந்த சிலையின் புராதன தன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக உக்கிர அம்மன் சிலை என தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: சிவகங்கை: ஓடஓட விரட்டி பயங்கரம்.. அரசு மருத்துவமனை வளாகம் அருகே இளைஞர் படுகொலை.!