காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இளையராஜாவுக்கு ஏற்பட்ட பெரும் அவமானம்?.. பெயர் கூட போடலையாம்..!! வெளியான உண்மை..!!
இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் படத்தின் விமர்சனம் எழுதிய போது, பிரபல ஊடகம் அவர் பெயரை எங்கும் குறிப்பிடாமல் இருந்துள்ளது. இது குறித்து சினிமா விமர்சகர் தெரிவித்ததை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர்தான் இசைஞானி இளையராஜா. கோலிவுட்டில் அன்றிலிருந்து இன்றுவரை இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் என யாருமே கிடையாது. மக்களுக்கு பிடித்த மென்மையான இசையை இசையமைத்திருப்பார்.
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற துறைகளிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா மற்றும் தம்பி கங்கை அமரனும் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றனர்.
இவர் ஜடந்த 1976ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "அன்னக்கிளி" என்ற படத்தின் இசையமைத்ததன் மூலம் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான இசையுடன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்திருந்தார்.
இத்தகைய நிலையில், பிரபல ஊடகமான விகடன் "அன்னக்கிளி" படத்தின் விமர்சனத்தை எழுதிய போது, பாடல்கள் எப்படி இருந்தது? என்று மட்டுமே எழுதியதாகவும், இளையராஜாவின் பெயர் மற்றும் அவரைப் பற்றி எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை என்று கூறப்படுகிறது. இதனை சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அனந்தன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.