மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகர், நடிகை கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து.. ஒருவர் பலி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு அந்தேரி, சித்ரகூட் பகுதியில் படப்பிடிப்பு தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு நடைபெறும்போது, நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியாகியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் அவசர கதியில் வெளியேறி இருக்கின்றனர்.
அப்போது, படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி வந்தவர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிகழ்வின் போது ரன்பீர் மற்றும் ஷ்ரத்தா ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் இல்லை. சிறிது நேரத்தில் வருவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.