மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் கைது.! என்ன நடந்தது.?
தமிழ் திரைத்துறையில் நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற மிகப்பெரும் காமெடி ஜாம்பவான்களாக இருந்தவர்களை எப்போதுமே மறக்க முடியாது. இந்த வரிசையில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜெயமணி என்பவர்.
பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறு வேடங்களிலும், காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தவர் தான் ஜெயமணி. இவர் தற்போது சென்னையில வசித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், கடந்த 18ஆம் தேதியன்று ஜெயமணியும் அவரது நண்பருமான திருமலை என்பவருடன் பிரபல மாலின் அருகில் உள்ள பூங்காவிற்கு வாக்கிங் சென்றுள்ளனர். அதே பகுதியில் நீதிபதி ஒருவரும் வாக்கிங் சென்றுள்ளார்.
அங்கு திடீரென்று ஜெயம் ரவியின் நண்பர் திருமலை என்பவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். மேலும் இது கைகலப்பாக முற்றி ஜெயமணி நீதிபதியை அடிக்க கை ஓங்கியிருக்கிறார். இந்த பிரச்சினையின் விளைவாக நீதிபதி கிண்டி போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் ஜெயமணியும் அவரது நண்பரையும் போலீசார் அதிரடி கைது செய்துள்ளனர்.