மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர்களை பின்னுக்கு தள்ளிய யோகிபாபு! ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இதில் இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகிபாபுவின் அசுர வளர்ச்சிபற்றி நடிகர் விஜய் பேசியிருந்தார்.
நடிகர் வடிவேலு திரையுலகில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சூரி அவரது இடத்தை பிடித்தார். ஆனால் அவரை அரைத்தமாவையே திரும்ப திரும்ப அறைகிறாரா என்ற விமர்சங்கங்கள் எழுத்தது. இதனால் நடிகர் யோகிபாபுவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. மாதம் 10 படங்கள் வெளிவந்தால் அதில் குறைந்தது 8 படங்களிலாவது யோகிபாபு நடித்துள்ளார்.
இவருடைய நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவிற்கு இணையாக இவர் ஒரு கதாபாத்திரத்தை செய்தார். இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். தற்பொழுது சுந்தர்.சி மற்றும் சிம்பு கூட்டணியிலும் நடிகர் யோகிபாபு கம்மிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஒரு நாளுக்கு ரூ.5 லட்சம் சம்பளம் என்று முடிவு செய்துள்ளனர். சுமார் 20 நாட்கள் நடிப்பதற்காக கமிட் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சூரி பணம் கம்மியாக இருந்தால் பரவாயில்லை நல்ல கதை இருந்தால் நான் நடிக்கிறேன் என்று தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளாராம்.