மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது, காமெடி நடிகர் யோகி பாபுவின் சம்பளம் இவ்வளவா?
தமிழ் சினிமாவில் வேலாயுதம், பட்டத்துயானை, மண் கராத்தே, யாமிருக்க பயமேன், காக்கிசட்டை, கொம்பன், வேதாளம் என பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு.
விவேக், வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது நகைச்சுவையில் பட்டையை கிளப்புபவர்கள் சூரி மற்றும் யோகி பாபு.
இவர்களுக்கென ஏராளமான ரசிங்கர் பட்டாளமே உள்ளது.
மேலும் முன்னணி கதாநாயகர்களை விட யோகிபாபுதான் தற்போது பயங்கர பிஸியாக உள்ளார். மேலும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் இருக்கின்றதாம். மேலும் அவர் தற்போது விஜய் 63 படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
மேலும் யோகி பாபு நடிப்பதற்கு இதுநாள் வரை ஒரு நாளுக்கு ரூபாய் 2 லட்சம் சம்பளமாக வாங்கி வந்துள்ளார்.
ஆனால் படவாய்ப்புகள் கூடிய நிலையில் சமீபத்தில் தனது சம்பளத்தை ரூபாய் 3 லட்சமாக உயர்த்தியுள்ளார். மேலும் தற்போது தளபதி 63 படத்தில் நடிக்க மொத்தமாக ரூபாய் 80 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ரசிகர்களுக்கிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.