மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினியின் 'லால் சலாம்' படத்தை வெளியிட தடை? கலக்கத்தில் படக்குழு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லால் சலாம் படத்தில் நடித்துள்ள நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஆர்.டி.ஐ.செல்வம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், லால் சலாம் படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அமைதியாக வாழும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தி லால் சலாம் படமெடுத்துள்ள ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.