#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காவல் ஆணையருடன் தகராறு; விஷால் பட நடிகை மீது வழக்குபதிவு!! நடந்தது என்ன??
தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த தேவி 2 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை டிம்பிள் ஹயாதி. இவர் கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை டிம்பிள் ஹயாதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் நண்பருடன் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் துணை காவல் ஆணையாளர் ராகுல் ஹெக்டே என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் டிம்பிள் காவல்துறை துணை ஆணையரின் காரை மோதியதாக அவர் மீது ஹைதராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராகுல் ஹெக்டே கூறுகையில், எனது அப்பார்ட்மெண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது காரை யாரோ மோதி சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது டிம்பிள் மற்றும் அவரது நண்பர் எனது காரில் மோதி சேதப்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அவர் அளித்த புகாரின்பேரில் டிம்பிள் ஹயாதி மீது வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது.
இதற்கு முன்னரே கார் பார்க்கிங் சம்பந்தமாக டிம்பிள் மற்றும் காவல் ஆணையரின் டிரைவருக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை டிம்பிள் ஹயாதி தனது ட்விட்டர் பக்கத்தில், அதிகாரத்தை பயன்படுத்தி தவறுகளை மறைக்க இயலாது. உண்மை வெல்லும் என குறிப்பிட்டுள்ளார்.