மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.! யார்? அதுவும் எவ்வளவு தெரியுமா??
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி 90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரு வீடுகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே ஏராளமான சண்டைகள், சச்சரவுகள் என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது.
நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா,விஷ்ணு விஜய், விஜய் வர்மா, தினேஷ், மணி ஆகிய எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் விஷ்ணு விஜய் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் இந்த வாரம் பணப்பெட்டி ஒன்றை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
பெட்டியில் இருந்த தொகை ஏறி, இறங்கிய வண்ணமே இருந்தது. இதற்கிடையில் போட்டியாளர்கள் பணத்தின் மதிப்பு உயருவதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது விசித்ரா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது அவர் ரூ.13 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது உண்மையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.