மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன் தவறை மறைப்பதற்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்.. ஆதாரத்தை வெளியிடுவேன் என மிரட்டும் பிரபலம்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப கட்டத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தனது நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து சினிமா துறையில் கால் பதித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஆரம்ப நிலையில் உறுதுணையாக இருந்தவர் இசையமைப்பாளர் இமான். பின்பு காலப்போக்கில் இமானும், சிவகார்த்திகேயனும் இணைந்து திரைப்படங்கள் எதுவும் பண்ணாமல் ஒருவரை ஒருவர் தவிர்த்து வந்தனர்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் எந்த ஜென்மத்திலும் இனி நாங்கள் சேர்ந்து பயணிக்க போவதில்லை என் குழந்தைகளுக்காக தான் உண்மையை வெளியே சொல்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருநதர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன்படி பிரபல பத்திரிகையாளர் அந்தணன் சிவகார்த்திகேயனை பற்றி மேலும் பல விஷயங்கள் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். அவர், சிவகார்த்திகேயன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக பல கோடி ரூபாய் நோட்டு யூ டியூபர்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமான ஆடியோ ஆதாரம் ஒன்று என்னிடம் உள்ளது. நேரம் வரும்போது வெளியிடுவேன் என்று கூறி வருகிறார்.