திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய்யை கடுமையாக விமர்சித்தாரா.! வெடித்த பெரும் சர்ச்சை.! உண்மையை உடைத்த லதா ரஜினிகாந்த் தரப்பு!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் லியோ. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படமும் பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் யாருடைய படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற வாக்குவாதமும் சமூக வலைதளங்களில் நிலவி வருகிறது. இருவரது ரசிகர்களும் விமர்சனங்கள் செய்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் பட வசூலை லியோ படம் தொடவில்லை என விஜயை கடுமையாக விமர்சித்து ரசிகர் ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதற்கு லதா ரஜினிகாந்த் லைக் செய்திருந்தார் என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் லதா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அந்த எக்ஸ் தள கணக்கு போலியானது எனவும், இதுதான் லதா ரஜினிகாந்தின் எக்ஸ் தள கணக்கு எனவும் ரஜினி தரப்பு PRO ரியாஸ் அகமது விளக்கம் அளித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
Dear All,
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 6, 2023
This is the official account of #LathaRajinikanth Ma'am. Kindly follow for regular updates! @latharajnikanth @ash_rajinikanth @soundaryaarajni @ParasRiazAhmed1 @V4umedia_ pic.twitter.com/J2zMrs6ssV