திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பாலிவுட்டுக்கு சென்றும் காப்பி அடிப்பதை நிறுத்தலயா அட்லீ.? ஜவான் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வருகின்ற அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, சுனில் க்ருவர் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏ. ஆர். ரகுமான் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
வழக்கமாகவே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கும் அட்லீ இந்தப் படத்தில் அதே சிக்கலில் தற்போது மாட்டியுள்ளார். அவர் இயக்கிய முதல் திரைப்படத்திலிருந்து இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அட்லீயின் முதல் படமான ராஜா ராணி மணிரத்தினத்தின் மௌன ராகம் திரைப்படத்தின் கதை என ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். மேலும் அவர் இயக்கிய மெர்சல் திரைப்படமும் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தின் காப்பி என ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் ஜவான் திரைப்படம் கமல்ஹாசன் திரைப்படத்தின் காப்பி என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஜவான் திரைப்படமானது கமல்ஹாசனை வைத்து பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி என்ற திரைப்படத்தின் தழுவல் என தற்போது செய்திகள் வெளியாகி பாலிவுட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன.