திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ரூம் போடுவதற்கு இரண்டு லட்சம் இருக்குது, குழந்தைகளை படிக்க வைக்க பணம் இல்லையா" பிக் பாஸ் அமீரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. முதன்முதலில் இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.
இவ்வாறு சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இதன்பின்னர் இருவருககும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சீரியலில் நடிக்காமல் இருந்த பாவனி பிக்பாஸில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சகபோட்டியாளரான அமீர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே இவரை காதலிப்பதாக கூறி வந்தார். அன்று வெளியான பின்பு அமீரும் பாவனியும் ஒருவரை ஒருவர் காதலித்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற நிலையில் அமீர் சமீபத்தில் லைவில், ஹோட்டலில் தங்குவதற்கு ரூம் செலவிற்கு மட்டுமே இரண்டு லட்சம் செலவு செய்திருக்கிறார் என்று பேசினார். இச்செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சமீபத்தில் ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதற்காக பணம் வேண்டும். என்னிடம் இப்போதைக்கு பணம் இல்லை என்று கூறி வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி "ரூம் போடுவதற்கு இவ்வளவு செலவு செய்கிறார். ஏழை குழந்தைகளை படிக்க வைக்க பணம் இல்லையா" என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.