காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
" திருடவேண்டும் என்று நினைப்பவர் அமீர்" தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றசாட்டு.?
2002ம் ஆண்டு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர் அமீர். அதே ஆண்டு "மௌனம் பேசியதே" என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2005 ஆம் ஆண்டு "ராம்" திரைப்படத்தை இயக்கினார்.
மேலும் சில படங்களில் நடித்துள்ள அமீர், தயாரிப்பாளராகவும் உள்ளார். தொடர்ந்து 2007ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் ப்ரியாமணியை வைத்து அமீர் இயக்கிய "பருத்தி வீரன்" திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் கார்த்தியின் 25வது படமான "ஜப்பான்" டிரைலர் வெளியீட்டு விழாவில் , அமீரை தவிர கார்த்தியின் மற்ற இயக்குனர்கள் வந்திருந்தது பேச்சு பொருளானது . இதுகுறித்து அமீரிடம் கேட்டபோது, பருத்திவீரன் படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனைகளை பற்றி கூறியிருந்தார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கேட்டபோது, "அமீர் சரியாக இருந்திருந்தால் இந்நேரம் ஹாலிவுட்டிற்கு சென்றிருப்பார். ஆனால் இருக்கறதுக்குள்ளேயே திருடவேண்டும். உழைத்ததெல்லாம் சாப்பிடக் கூடாது என்று நினைப்பவர்" என்று அமீரை சரமாரியாக தாக்கியுள்ளார். இச்செய்தி திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.