திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜெயிலர் படத்தை மோசமாக விமர்சித்த பிரபல நடிகர்.! வைரலான வீடியோவால் பரபரப்பு..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. மேலும் 600 கோடி வரை இப்படம் வசூலானது என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் வெற்றியையடுத்து ஜெய்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர், ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கியதாக செய்திகள் வெளியாகின.
இது போன்ற நிலையில், ஜெய்லர் திரைப்படம் குறித்து பிரபல நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் போன்ற பன்முக திறமைகளை கொண்ட ரமேஷ் கண்ணா பேட்டியின் போது மிகவும் மோசமாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "ஜெயிலர் படம் தங்கப்பதக்கம் படத்தின் காப்பி தான். கொஞ்ச நேரத்துக்கு மேல இந்த படத்தை பார்க்க முடியாமல் வெளியே வந்தேன். இவ்வளவு மோசமான படத்தை கொண்டாடுகிறார்கள்" என்று பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.