திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏன், என்னாச்சு... விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குக் வித் கோமாளி புகழ்...காரணம் என்ன தெரியுமா.?
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் புகழ். அதனை தொடர்ந்து வெள்ளிதிரைக்கு தாவிய அவர் அஜித், சூர்யா, சந்தானம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் காமெடியனாக மட்டுமின்றி ஷோ கிப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரமெடுக்கிறார். தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் புகழ் கலக்கி வருகிறார். இந்த வாரம் 1970கள் முதல் 2020 வரையிலான திரைப்படங்களில் இருந்து கதாபாத்திரங்களை தேர்வு செய்து கோமாளிகள் கலக்க உள்ளனர்.
அதில் பிரபல மெகா ஹூட் திரைப்படமான தளபதி விஜயின் கில்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளார் புகழ். இந்நிலையில் தான் சமூக வலைத்தளத்தில் புகழ் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அனைத்தும் கற்பனையே என புகழ் குறிப்பிட்டுள்ளார்.