மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெயிலில் இருந்து வெளியே வந்த குக் வித் கோமாளி புகழ்.! ஏன்? என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துக் கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள், டைமிங் காமெடிகள் ரசிர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் புகழின் உச்சிக்கே சென்ற அவருக்கு சினிமாவில் படவாய்ப்புகளும் குவியத் தொடங்கியது.
அதனை தொடர்ந்து புகழ் கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளிவந்த சபாபதி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தார். மேலும் அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், ஆர்.ஜே. பாலாஜியுடன் வீட்ல விசேஷம் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஜூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷிரின்கின் சாவ்லா நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் புகழ் சிறையில் இருந்து வெளியே வருவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் ஏன்? எதற்காக புகழ் ஜெயிலுக்கு சென்றார் என கேள்வியெழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த வீடியோ புகழ் புதிதாக நடித்து வரும் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.