மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி அப்டேட்.. சீசன் 3-ன் வெற்றியாளர் யார் தெரியுமா?.! தெரிஞ்சா அசந்துருவிங்க..!!
குக் வித் கோமாளி சீசன் 3-ன் வெற்றியாளர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது "குக் வித் கோமாளி". சமையல் நிகழ்ச்சி, கலகலப்புகள் கொண்ட இந்த நிகழ்ச்சியை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன் முடிவடைந்துள்ள நிலையில், முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலருக்கும் பட வாய்ப்பு குவிந்து வருகிறது. மூன்றாவது சீசன் தொடங்கி இறுதி கட்டத்தினை நெருங்கிவருகிறது. இறுதிப்போட்டியில் அம்மு அபிராமி, ஸ்ருதிஹா, கிரேஸ், கருணாஸ், சந்தோஷ் பிரதாப், தர்ஷன் வித்யாலயா ஆகிய 6 போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், இறுதிப்போட்டியில் டைட்டில் வின்னராக ஸ்ருதிகா வெற்றியை தட்டிதூக்கியுள்ளார். இப்போட்டியில் இரண்டாவது இடத்தை தர்ஷனும், மூண்டாவது இடத்தை அம்மு அபிராமியும் கைப்பற்றியுள்ளனர்.இவர்களது வெற்றிக்கு சக போட்டியாளர்கள் முதல் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.