திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா. யங் ஹீரோயின்களையே ஓரங்கட்டிடுவார் போல! 36 வயதில் குக் வித் கோமாளி ஸ்ருதி எப்படியிருக்கார் பார்த்தீங்களா!!
![cook-with-comali-shruthika-photoshoot](https://cdn.tamilspark.com/large/large_images---2022-03-25t115211835-46825-1200x630.jpeg)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாகவும், 10 பேர் கோமாளியாகவும் கலந்து கொண்டனர்.
இந்த 10 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை ஸ்ருதிகா. இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்பத்தில் செட்டிலானார்.
இந்நிலையில் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின் அவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதிகா தற்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் 36 வயதிலும் யங் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.