மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளிக்கு வருகை தந்த முன்னணி கியூட் நடிகை.! சிக்கி வசமாக வாங்கிகட்டி கொண்ட புகழ்! வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் மூன்று சீசன்களும் செம ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது 4வது சீசன் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி மிகவும் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி புகழ் விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் குக்காக கடந்த சீசன்களில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த சிவாங்கி களமிறங்கியுள்ளார். இதில் கோமாளியாக கடந்த சீசன்களில் இருந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை மற்றும் அவர்களுடன் புதிதாக ஜிபி முத்து, மௌன ராகம் ரவீனா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா ஆகியோர்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் செஃப் தாமு மற்றும் வெங்கட் பட் நடுவர்களாக உள்ளனர்.
கடந்த வாரம் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். இந்நிலையில், இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். அவர் புகழை கண்டு, நீ நிறைய பெண்களிடம் ஃப்ளர்ட் செய்கிறாய். உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல என கேட்டு கலாய்த்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.