திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"வீட்டு வாடகைக்கு காசு அனுப்புங்க" கெஞ்சிய கூல் சுரேஷை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..
ஆரம்பம் தமிழ் சினிமாவில் நடிகரும் வில்லனுமாக நடித்துக் கொண்டிருந்தவர் கூல் சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வில்லனாகவும் நடித்துள்ளார். சில வருடங்களாக திரைப்படங்களில் எந்த வித பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.
தற்போது படங்களில் பிரமோஷன் செய்கிறேன் என்கிற பெயரில் பலவிதமான அட்டாசிட்டீஸ்களை செய்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இயக்குனர் சங்கரின் மகளை காதலிக்கிறேன் என்று இணையத்தில் கூறி பிரச்சனையை மாட்டிக்கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் மேடையில் தொகுப்பாளினியின் கழுத்தில் மாலையிட்ட பத்திரிகையாளர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். பின்பு செய்த தவறிற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார். மேலும் நடிகை யாஷிகாவிடம் தவறாக நடந்து கொண்டு அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்தார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோவில் கூல் சுரேஷ் தான் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டு தற்போது வாடகைக்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறேன். மிடில் கிளாஸ் ஃபேமிலி தான் நான் கூகுள் பே மூலமாக முடிந்த காசு அனுப்புங்க என்றும் கேட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.