இயக்குநர் ஷங்கருக்கு அபராதம் விதித்து, நீதிமன்றம் அதிரடி உத்தரவு!.



court benality to director shankar

எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரப்படும் வழக்கில் ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம்10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.

Court order

அவர் அந்த வழக்கில் தன்னுடைய அனுமதி இல்லாமல் எந்திரன் படம் எடுத்ததால், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இயக்குநர் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சி விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை. படப்பிடிப்புக்காக இயக்குநர் ஷங்கர் வெளியூர் சென்றிருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

Court order

இதை விசாரித்த நீதிபதி, சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணைகளை முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர்ந்து அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். இதனால் இயக்குநர் ஷங்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மேலும் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.