திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கைது செய்தும், ஓவர் ஆட்டம் காட்டிய சர்ச்சை நாயகி மீரா மிதுன்! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!
மாடல் அழகியும், பிக்பாஸ் பிரபலமுமான மீரா மிதுன் அவ்வப்போது ஏதாவது மோசமான கருத்துக்களை கூறி சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரையும், அந்த சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது அவரை கைது செய்ய வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியும் மீரா ஆஜராகவில்லை. மேலும் தன்னை கைது செய்ய முடியாது என மீண்டும் திமிராக பேசி வீடியோவும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் அவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவர் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது எனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே வாக்குமூலம் கொடுப்பேன் என பிரச்சனை செய்துள்ளாராம். மேலும் போலீசார் எனக்கு உணவு கொடுக்கவில்லை எனவும் அவரது கையை உடைக்க முயன்றதாகவும் கூச்சல் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதற்கெல்லாம் காரணமாக இருந்த அவரது காதலரான அபிஷேக் ஷியாம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று இவரது வழக்கை விசாரணை செய்த நீதிபதி வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் ஆட்டம் முடிந்தது என கருத்து கூறி வருகின்றனர்.