மீண்டும் வெடித்த சர்ச்சை! சூர்யா- ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!



court-order-to-file-case-against-surya-and-jothika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், மணிகண்டன் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

இதில் சூர்யா சந்துரு என்ற வழக்கறிஞராக நடித்துள்ளார். இப்படம் இருளர் இன மக்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதே சமயம் வன்னியர்கள் சமூகத்தினரை தவறாக சித்தரிப்பது போன்று இருப்பதாக சர்ச்சையும் எழுந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல், எந்த குறிப்பிட்ட சமூகத்தினரையும் காயப்படுத்தும் எண்ணத்தில் இந்த படம் எடுக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.

surya

ஆனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.