மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது நீதிமன்ற வழக்கு... பரபரப்பு குற்றச்சாட்டு..! அதிர்ச்சியான ரசிகர்கள்.!?
பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஹிந்தி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோனை தெரியாதவர் என்று யாராலும் இருக்க முடியாது. சிறுசு முதல் பெருசு வரை இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் வந்தது. பலரின் கனவு கன்னியாக சன்னி லியோன் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
2017 ஆம் ஆண்டு வெளியான ஜிஸ்ம்2 என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முதன்முதலாக ஹிந்தியில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் அடுத்தடுத்து சன்னி லியோனுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இதனைத் தொடர்ந்து சூட்டவுட் வித் வடல, ஜாக்பாட், டின்னர் அன்ட் லோலோ, ராகினி எம் எம் எஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தமிழில் 2014 ஆம் வருடம் ஜெய் நடித்த வடகறி என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதன் பின் தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற படம் வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், தமிழ் ஹிந்தி மொழி ரசிகர்கள் மட்டுமல்ல மலையாளத்திலும் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. மலையாளத்திலும் சன்னி லியோன் ஒரு படம் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சன்னி லியோனை அழைத்துள்ளனர். ஆனால் சன்னி லியோன் சரி என்று கூறிவிட்டு வரவில்லை. இதனால் கடுப்பான நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சன்னி லியோன் மீது நீதிமன்றத்தில் வழக்கு அளித்துள்ளனர். இதனை விசாரித்த நீதிபதி எந்த ஆதாரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்ததால் தள்ளுபடி செய்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை கண்டித்தனர். இச்செய்தி சன்னி லியோனின் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.