மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் ஒழுக்கமான குழந்தை பெற முடியாது" பிரபலத்தின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக புலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். 2000 ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய், தற்போது வரை தமிழ் ரசிகர்களின் மனதில் உலக அழகியாகவே இடம்பெற்று வருகிறார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இப்படத்திற்கு பின்பு ஐஸ்வர்யா ராய் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
இது போன்ற நிலையில், விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சையாக பேசியிருக்கிறார். அவர் கூறியது, "ஐஸ்வர்யா ராயை போன்ற நடிகையை திருமணம் செய்து கொண்டால் ஒழுக்கமான குழந்தையை பெற முடியாது" என்று கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.