திருமண கோலத்தில், கையில் கிரிக்கெட் பேட்டோடு இப்படியொரு போட்டோஷூட்டா! இந்த இளம்பெண் யார்னு தெரியுமா?



cricket-player-different-marriage-photoshoot-viral

தற்காலத்தில் திருமணத்தின்போது வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்துவது என்பது பெருமளவில் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை திருமணக் கோலத்தில் இருந்தவாறு கிரிக்கெட் விளையாடுவது போன்று நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக இருப்பவர் சஞ்சிதா இஸ்லாம். 24 வயதாகும் இவர் ரங்க்பூரை சேர்ந்த முதல் தர கிரிக்கெட் வீரரான மிம் மொசாடீக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது அவர் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அதாவது மஞ்சள் நிற பாரம்பரிய திருமண உடையில், முழுவதும் நகைகள் அணிந்து கையில் பேட்டோடு கிரிக்கெட் விளையாடுவது போன்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.