தலைதூக்கும் ஜம்மு காஷ்மீர் சர்ச்சை.! டுவிட்டரில் கடுமையாக மோதிக்கொள்ளும் பிரபல கிரிக்கெட் வீரர்கள்!!



cricket players about jammu kashmir

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அளித்திருக்கும் சிறப்பு அந்தஸ்து அரசியல் அமைப்பின் 370, 35A ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகளை, எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காஷ்மீர் மக்களுக்கு ஐநா தீர்மானத்தின்படி அவர்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நாம் அனைவரையும் போல சுதந்திரத்தின் உரிமைகள் கொடுக்கப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் ஏன் உருவாக்கப்பட்டது? அது ஏன் தூங்குகிறது. மனிதாபிமானத்திற்கு எதிராக காஷ்மீரில் செய்யப்படம் ஆக்கிரமிப்பு மற்றும் குற்றங்கள் கவனிக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.



 

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், ஷாஹித் அஃப்ரிடி சரியாகத் தான் கூறியுள்ளார். திட்டமிடப்படாத ஆக்கிரமிப்புகள், மனிதநேயமற்ற குற்றங்கள்  என காஷ்மீர் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது. இப்பிரச்னையை முன்னெடுத்த அஃப்ரிடி பாராட்டுக்குரியவர்.'ஆனால் இவை எல்லாம் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்ரமிப்பு செய்ததால் நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்ட  மறந்துவிட்டார். கவலைப்படாதீர்கள் , எல்லாம் விரைவில் சரியாகிவிடும்என பதிவிட்டுள்ளார்.