மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கும் சிஎஸ்கே அணி வீரரின் தங்கை! அதுவும் யார் படத்தில் பார்த்தீர்களா!!
தமிழில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகவிருக்கும் படத்தில் சிஎஸ்கே அணி வீரரின் தங்கை அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் அண்மையில் பிக்பாஸ் கவின் நடிப்பில் ஊர்க்குருவி என்ற படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து அடுத்ததாக 'வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ என்ற படத்தையும் தயாரிக்கவுள்ளனர்.
அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கும் இப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹரின் தங்கை மால்டி சஹர். தீபக் சஹரின் சகோதரர் ராகுல் சஹர் ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
மால்டி சஹர் இதற்கு முன்பு குறும்படங்களிலும், வெப்சீரிசிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் கொண்ட அவருக்கு கவுதம் மேனன் இயக்கத்திலும், ராஜமவுலி இயக்கத்திலும் நடிக்க ஆசையாம். இந்த நிலையில் அவர் தற்போது நயன்தாரா- விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.