திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
70 வயது மூதாட்டிக்காக பேருந்தை நிறுத்தத்தை சோகம்.. ஓட்டுநர் & நடத்துனருடன் வாக்குவாதம்.. பகீர் வீடியோ வைரல்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டில் இருந்து குள்ளஞ்சாவடி வரையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 6ம் எண் வழித்தடத்தில் கிராமப்புற பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ - மாணவியர்கள், தொழிலாளர்கள் என பலரும் இப்பேருந்தை நம்பியே இருக்கின்றனர்.
இவர்கள் பண்ரூட்டி செல்ல விரும்பும் பட்சத்தில், மேற்கூறிய பேருந்தில் பயணித்து பண்ரூட்டி செல்ல வேண்டும். இந்நிலையில், நேற்று பேருந்து சிலம்பி நாதன்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் மாலை 04:30 மணியளவில் 70 வயது மூதாட்டி பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது வருகை தந்த பேருந்து ஓட்டுநர் & நடத்துனர் மூதாட்டி பேருந்தை நிறுத்த கைகளை காண்பித்தும் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனைக்கண்டு ஆவேசமடைந்த ஒருவர், பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களை கண்டித்துள்ளார்.
அவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு கண்டித்தவருக்கு எதிராக குரலெழுப்பியதாக தெரியவருகிறது. இதனால் அவர் சம்பவத்தை விடியோவாக எடுத்து வைத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கிறார். வீடியோ எடுத்துவரும் நடத்துனரிடம் "உனக்கு மெமோ வாங்கிக்கொடுக்காமல் விடமாட்டேன், பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.