#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புஷ்பா பட பாடலை பார்த்ததும் இந்த குட்டி குழந்தையின் ரியாக்ஷனை பார்த்தீங்களா! உள்ளங்களை கொள்ளை கொள்ளும் கியூட் வீடியோ!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வரும் திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சியாட்டம் போட்டுள்ளார். புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.
மேலும் இந்த பாடல்களுக்கு நடனமாடி பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கியூட்டான குழந்தை ஒன்று டிவியில் புஷ்பா பட பாடலை பார்த்துவிட்டு அப்படியே நடனமாடும் காட்சி இணையத்தில் வெளியாகி பெருமளவில் உலாவி வருகின்றது. இது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.